http://www.madurainetwork.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
மதுரை தகவல்கள்
மதுரை பொது தகவல்கள்
Bank ATMs | Bank Branches | Bank Websites | மாநகர தகவல்கள்
மாநகர வரைபடம் | Member of Parliament | Pincode



மதுரை மாநகர தகவல்கள்

     மதுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும். மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை 9.93oவடக்கு 78.12oகிழக்காக அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 136 மீட்டர் (446 அடி) உயரத்தில் இருக்கின்றது.

     கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.

     தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.

     மதுரையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தியாகராசர் கலைக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரைக்கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி, யாதவர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரியும், நாடார் மகாஜன சங்கம் சா.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவர் பெண்கள் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றியுள்ளார்.

     தூங்கா நகரமான மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்கள் அமைந்துள்ளன.

     இது தவிர அணடை மாவட்டங்களான சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி, வைகை அணை, தேனி மாவட்டத்தின் அருகில் கேரளமாநில எல்லையில் உள்ள தேக்கடி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல இங்கிருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


இணைய பக்க முகவரி: http://www.madurainetwork.com/general/cityinfo.html


Bank ATMs | Bank Branches | Bank Websites | மாநகர தகவல்கள்
மாநகர வரைபடம் | Member of Parliament | Pincode



ஆன்மீகம்
தினசரி தியானம்